வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா அவர்களின் ஆசிரியர்தின வாழ்த்துச் செய்தி!!

735

Indrarasa

அர்ப்பணிப்பு மிக்க ஆசியர் பணி மிளிர வாழ்த்துகிறேன். என்னை இந் நிலைக்குயர்த்திய ஆசான்களுக்கு தலை சாய்த்து அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர் சேவை செழித்தோங்க அவர்கள் வாழ்வு வளம்பெற அனைத்து ஆசிரியர்களையும் மனதார இந்நாளில் வாழ்த்துகின்றேன்.
சர்வதேசமெங்கும் 55 மில்லியனுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் 1 பில்லியனுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு தமது அர்ப்பணிப்பான சேவையை வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். எமது நாட்டிலும் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு 2லட்சத்துக்கு மேலான ஆசிரியர்கள் தமது உன்னதமான சேவையை வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள்.

இன்றைய இளையோர்களிடையே அதிகரித்து வருகின்ற வன்முறைகள், போதைப்பொருள் பாவனை, நெறி பிறழ்வு, கற்றலில் நாட்டமின்மை போன்ற முரண்நிலைச் சிந்தனையிலிருந்து மாணவர்களை மீட்டெடுக்க ஆசிரியர்களது அர்ப்பணிப்பான சேவை பாடசாலை உள்ளேயும் வெளியேயும் வேண்டப்படுகின்றது.

ஆசிரியர்கள் சமூகத்தின் முக்கிய வழிகாட்டி. அவர்கள் கற்பித்தலுக்கு மேலாக மாணவர்களின் ஆலோசகர்களாகவும், நண்பர்களாகவும், தொழில் வழிகாட்டுனர்களாகவும், பாதுகாவலர்களாகவும், முன்மாதியானவர்களாகவும், நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து இந்த நூற்றாண்டின் சவால்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய உன்னதமான பிரஜைகளை உருவாக்க உழைக்க வேண்டுமென அனைத்து ஆசிரியர்களையும் விநயமாக வேண்டிநிற்கிறேன்.

உங்களின் வளமான எதிர்கால நல்வாழ்விற்கு என்றும் எனது நல்வாழ்த்துக்கள்.
இ.இந்திரராசா
வடமாகாண சபை உறுப்பினர்
வவுனியா மாவட்டம்.