வவுனியா தமிழ் தேசிய முன்னணியின் இளைஞர் அணிக்கும் தலைவருக்குமிடையில் விசேடசந்திப்பு!!

608

தமிழ் தேசிய முன்னணியின் வவுனியா மாவட்ட இளைஞர்களுக்கும் கட்சியின் தலைவருக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இன்று (05.10.2014) வவுனியா தலைமைக் காரியாலையத்தில் காலை 9.00 மணிக்கு கட்சியின் தலைவர் திரு.எஸ்.துஸ்யந்தன் தலைமையில் இடம்பெற்றது

மேற்படி கூட்டத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கை சம்மந்தமாகவும் மேலும் புதிய அங்த்தவர்களை இணைத்துக்கொள்வது பற்றியும் பிரதேசமட்டத்தில் விரிவுபடுத்துவது பற்றியும் கலந்துரையாடப்பட்டது

குறித்த கலந்துரையாடலுக்கு நூற்றுக்கும் அதிகமான அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

தலைவர் துஸ்யந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் செயலாளர் திரு ப.செந்தில், மத்தியகுழு உறுப்பினரும் பிரதேசசபை உறுப்பினருமான திரு.நகுலேஸ்வரன், முல்லை மாவட்ட பொறுப்பாளர் திரு.சிறி மற்றும் பல முக்யஸ்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

SAM_0389 SAM_0410 SAM_0411 SAM_0414 SAM_0440 SAM_0475 SAM_0489