6 ஆண்டுகளாய் காதலித்து தன்னைத் தானே மணமுடித்த வினோதப் பெண்!!

660

Lady

பிரித்தானியாவில் பெண் ஒருவர் தன்னை தானே திருமணம் செய்துக் கொண்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆணும் பெண்ணும் திருமணம் செய்துக் கொள்வது என்பது குறைந்து சமீப காலங்களில் குறைந்து ஓரினச்சேர்க்கை திருமணங்கள் செய்வது அதிகமாகிவிட்டது.

இந்நிலையில் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு பிரித்தானியாவை சேர்ந்த கிரேஸ் ஹெல்டர் (Grace Gelder) என்ற பெண் புகைப்படக்காரர் தன்னை தானே 6 ஆண்டுகளாய் காதலித்து வந்து தற்போது திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

இவர் பூங்கா ஒன்றில் தனியாக அமர்ந்து தனது திருமணத்தை அறிவித்ததுடன், தன் திருமணத்துக்கு தேவையான மணப்பெண் உடை மற்றும் மோதிரம் வாங்கியுள்ளார்.

இதன்பின் தனது திருமண நாளன்று டேவன் (Davon) என்ற இடத்தில் உள்ள பண்ணை வீட்டில் கண்ணாடி முன்பு நின்று கொண்டு தனக்குத் தானே மோதிரத்தை அணிவித்ததுடன், இறுதியில் தனது உருவத்துக்கு தானே முத்தம் கொடுத்து அன்பையும் பறிமாறிக் கொண்டுள்ளார்.

மேலும் திருமணத்திற்கு வருகை தந்திருந்த தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தடபுடலாக விருந்தளித்துள்ளார்.

கிரேசின் திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், இது வித்தியாசமான திருமண அனுபவத்தைப் பார்த்த அனுபவத்தைத் தந்ததாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.