வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தான தேர்த் திருவிழா நாளை!!

626

Kovil

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணு தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ பெருவிழா கடந்த 29.09.2014 அன்று பகல் 11.00மணிக்கு கொடிஏற்றத்துடன் ஆரம்பமாகியது.

மேலும் சப்பர திருவிழா இன்று 06.10.2014 திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கும், தேர் திருவிழா நாளை 07.10.2014 செவ்வாய்க்கிழமை காலை 10.00 மணிக்கும் நடைபெறவுள்ளது.

மேலும் தீர்தோற்சவம் நாளை மறுதினம் 08.010.2014 புதன்கிழமை பகல் 11.00 மணிக்கும், திருக்கல்யாணம் 09.10.2014 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கும், ஆஞ்சநேயர் உற்சவம் 10.10.2014 வெள்ளிகிழமை காலை 9.00 மணிக்கும் இடம்பெறவுள்ளது.

இன் நிகழ்வுகளில் வருகை தந்து அருள்மிகு ஸ்ரீ தேவி பூதேவி ஸ்ரீ மஹா விஷ்ணுவின் அருளை பெற்று கொள்ளும் வண்ணம் ஆலய பரிபாலன சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

-கஜேந்திரன்-

kannankovil1