13 ஆண்டுகளாய் தண்ணீரை மட்டுமே உணவாக கொண்ட நபர்!!

585

water_food_man

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் கடந்த 13 ஆண்டுகளாக தண்ணீரை மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த இனியன் என்பவர் நீரை மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது,

கடந்த 2002ம் ஆண்டு மார்ச் 15ம் திகதி முதல் நீர் உணவு முறைக்கு மாறிவிட்டேன். அது முதல் நீரை ஆகாரமாகவும், விண்வெளி, தூய்மையான காற்று, சூரிய சக்தி ஆகியவற்றில் இருந்து ஆற்றலை எடுத்துக் கொள்ளும் நிலைக்கு எனது உடல் பழக்கப்பட்டு விட்டது.

அது ஆரோக்கியமாகவும் இயற்கை சார்ந்த விடயமாகவும் உள்ளது. இது அதிசயம் அல்ல. என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் அதுபோல் தான் இருக்கின்றனர். இந்தக் கலையை மற்றவர்களுக்குப் பரவச்செய்யவும் மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவும் ஏற்பாடு செய்து வருகிறோம்.

வாழ்வில் ஒருமுறை நீருணவுப் பயிற்சியை எடுத்துக் கொண்டு விட்டால் போதும். அப்புறம் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்பதில்லை. வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவு முறைக்கு மாறிவிடலாம்.

எப்போது ஆரோக்கியமும் உடல் பலமும் நிம்மதியும் தேவைப்படுகிறதோ அப்போது தனக்குத் தானே கடைபிடித்துக் கொண்டால்போதும்.

நீருணவு உட்கொண்டால் மருத்துவமனைகள் தேவைப்படாது. இது உடல் சார்ந்த விடயமல்ல. மனம் சார்ந்தது. மனதளவில் தயாராகி விட்டால் ஒவ்வொருவரும் யோகி தான்.

யோக மருத்துவமான இந்தப் பயிற்சியை சாதாரண மக்களும் கடை பிடிக்கும் வண்ணம் இப்போது அனைவருக்கும் சொல்லிக் கொடுத்து வருகிறோம் என கூறியுள்ளார்.