ஜெயலலிதாவுக்கு பிணை வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு : பிணை கிடைத்ததாக பரவிய தவறான தகவல்!!

835

Jaya3

முன்னதாக ஜாமீன் வழங்கப்பட்டதாக தவறான தகவல்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பரவின. நீதிபதியின் தீர்ப்பு இப்போது தான் வெளியானது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மற்றும் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நீதிபதி சந்திரசேகரன் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.

ஜெயலலிதாவுக்கான ஜாமின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்குவதற்கு எந்த வித முகாந்திரமும் இல்லை என்று நீதிபதி சந்திசேகரன் தெரிவித்தார்.

ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட, தண்டனையைத் தடை செய்யும் மனுவும், ஜாமின் மனு கேட்பு மனுவும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படுவதாக நீதிபதி சந்திரசேகரன் தனது தீர்ப்பில் கூறினார்.