பல்லாயிரக் கணக்கான பக்தர்களின் மத்தியில் தேரில் வலம் வந்த வல்லிபுர ஆழ்வார்!!

407

சரித்திரப் பிரசித்திபெற்ற வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா இன்று காலை 9.15 மணியளவில் இடம்பெற்றது. கடந்த மாதம் 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று இன்று தேர்திருவிழா வெகு சிறபாக இடம்பெற்றது.

காலை 8 மணியளவில் வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்று 9.15 மணிக்கு சுவாமி தேரில் வலம் வந்தார். நாட்டின் பல பகுதிகளிலிருந்து வல்லிபுர ஆழ்வாரைத் தரிசிக்க பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.

விசேட போக்குவரத்து சேவைகளை இலங்கை போக்குவரத்துச் சபை மேற்கொண்டிருந்தது.

நாளை புதன்கிழமை சமுத்திர தீர்தத் திருவிழா இடம்பெறவுள்ளது. சந்திர கிரகணம் இடம்பெறுவதை முன்னிட்டு இம்முறை வழக்கத்துக்கு மாறாக பிற்பகல் 2.30 மணிக்கு சுவாமி தீர்த்தமாட சமுத்திரத்துக்குப் புறப்பட்டுச் சென்று அங்கு 3.30 மணியளிவல் தீர்த்தமாடிவிட்டு மாலை 5 மணிக்கு ஆலயம் திரும்பினார்.

நாளை மறுதினம் வியாழக்கிழமை காலை கேணித்தீர்த்தம் இடம்பெற்று மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறும்.

11 12 13 14 15 16