வவுனியா ஊடாக பளை உள்ளிட்ட தபால் ரயில் சேவைகள் இரத்து!!

705

Train

பதுளை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா, பளை ஆகிய பிரதேசங்களுக்கான இரவுநேர தபால் ரயில் சேவைகள் இன்று (08.10) இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில்வே ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.