மேலும் இரு வீரர்களுக்கு பந்து வீசத் தடை!!

245

Bow

பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் சயீத் அஜ்மலின், பந்துவீச்சு சட்டவிரோதமாக இருப்பதாக கூறி அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தற்காலிக தடை விதித்தது.

அவரைத் தொடர்ந்து சிம்பாவே சுழந்பந்து வீரர் பிராஸ்பா உத்செயா, பங்களாதேஷ் சுழற்பந்து வீரர் சோஹக் காஜி ஆகியோர் பந்துவீச தடை விதித்து ஐ.சி.சி. நடவடிக்கை எடுத்து உள்ளது.

இந்த இருவரது பந்து வீச்சும் சந்தேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக புகார் கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களது பந்துவீச்சு முறை ஆய்வு செய்து பார்க்கப்பட்டது.

இருவரும் ஐ.சி.சி. நிர்ணயித்த அளவைவிட 15 டிகிரி அளவில் கூடுதலாக பந்து வீசுவது தெரியவந்தது. அதை தொடர்ந்து அவர்களது பந்துவீச்சு சட்டவிரோதமானது என்று ஐ.சி.சி. அறிவித்து, தற்காலிக தடை வித்துள்ளது.

இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது. தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஓகஸ்ட் மாதம் நடந்த 3வது ஒருநாள் போட்டியின் போது உத்செயா பந்துவீச்சு பற்றியும், அதே மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது காஜியின் பந்துவீச்சு பற்றியும் புகார் செய்யப்பட்டு இருந்தது.

இதற்கிடையே பந்து வீச்சாளர்கள் விதிமுறைப்படி வீசுங்கள் என்று முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் அறிவுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.