அமெரிக்காவில் மூதாட்டி ஒருவர் 15 வயதை குறைத்து பேஸ்புக்கில் இணைந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள அன்னா ஸ்டோஹெர் (anna stoehr) என்ற 113 வயது பாட்டிக்கும் பேஸ்புக்கில் சேர வேண்டும் என்ற ஆசை உண்டானது.
எனவே, தானும் பேஸ்புக்கில் சேர்வது என அன்னா முடிவு செய்தார்.
ஆனால், 1905ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களால் மட்டுமே பேஸ்புக்கில் சேர முடியும் என்பது நிபந்தனை. எனவே, தனது வயதை மாற்றி பதிவு செய்து கணக்கைத் தொடங்கினார்.
1900ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பிறந்த அன்னா, வரும் 15ம் திகதி தனது 114வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். ஆனால், பேஸ்புக் கணக்குப் படி தனது வயதை 15 வருடங்கள் குறைத்துப் பதிவு செய்தார்.
114வது வயதை நெருங்கும் வேளையில், ஃபேஸ்புக்கில் இணைந்தது தனக்கு உற்சாகம் ஏற்படுத்துவதாக கூறியுள்ளார்.
தனது 15 வயதைக் குறைத்துப் பேஸ்புக்கில் இணைந்துள்ள அன்னாவை, சமூக வலைதளங்களில் வயதான இளையதலைமுறை (oldest teenager) என மற்றவர்கள் குறிப்பிடுகின்றனர்.