2 கோடி வெளிநாட்டுப் பணத்தை மலவாயிலில் மறைத்து கடத்திய மூவர் கைது!!

576

dollar

சட்டவிரோதமான முறையில் இரண்டு கோடிக்கும் அதிகமான வெளிநாட்டு பணத்தை கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூர் நோக்கிப் பயணிக்கவென இன்று (14.10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற மூவரை சோதனை செய்தபோது வெளிநாட்டு நாணயங்கள் மீட்கப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

இவர்களிடம் இருந்து இரண்டு கோடியே 20 லட்சம் பெறுமதியான யூரோ மற்றும் சுவிஸ் பிராங் மீட்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலவாயிலில் மறைத்து குறித்த பணத்தை சிங்கப்பூர் கொண்டுசெல்ல சந்தேகநபர்கள் முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.