நேற்று (14.10) சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் வவுனியா மாவட்ட செயலகத்தின் ஏற்பாடில் கோவில்குளம் சிவன்கோவில் காஞ்சி சிவமடத்தில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசஅதிபர், மேலதிக அரச அதிபர், பிரதேச செயலாளர், சிறுவர் தேசிய அதிகாரசபை உத்தியோகத்தர்கள் மற்றும் வவுனியாவில் இயங்கும் அருளகம் சிறுவர் இல்லம், இந்து அன்பகம், சிரிலிய செவன, சாய் சிறுவர் இல்லம் , டொன்போஸ்கோ, கிருபை இல்லம் ஆகியனவற்றின் சிறுவர்களும் பிரதிநிதிகளும் சிவன் முதியோர் இல்லத்தின் முதியவர்களும் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் சிறுவர்களின் நிகழ்சிகள் நடனம், வில்லுப்பாட்டு முதலியனவும் சிவன் முதியோர் இல்லத்தை சேர்ந்த முதியவர்களும் சிறுவர்களினால் மாலையணிவித்து கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அத்துடன் அருளகம் சிறுவர் இல்லத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவ மாணவிகளுக்கு அருளகம் சிறுவர் இல்ல நிர்வாகத்தினரால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
-கஜேந்திரன்-























