வவுனியா ஸ்ரீராமபுரம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்டத்தில் உள்வாங்கபட்டு 5 வருட பூர்த்தி நிகழ்வு ஸ்ரீராமபுரம் சனசமுக நிலைய மண்டபத்தில் ஸ்ரீராமபுரம் மீள் எழுச்சி திட்ட தலைவர் திரு.ர.ராமச்சந்திரன் தலைமையில் இடம் பெற்றது .
நிகழ்வின் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மீள் எழுச்சி பிரதி திட்ட பணிப்பாளர் திரு டி.எ.டி.ரஞ்சித் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சி திட்ட உத்தியோகத்தர்களான சந்திரகுமார் (கண்ணன் ), துளசிகன், சஜீவன், குணம் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இவர்களுடன் ஸ்ரீராமபுரம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திரு.பி.நிசாந்தகுமார், ஸ்ரீராமபுரம் கிராம மாதர் சங்க தலைவி திருமதி எஸ்.ரஜனி, ஸ்ரீராமபுரம் மீள் எழுச்சி திட்ட செயலாளர் திரு எஸ்.ராமலிங்கம் உட்பட மீள் எழுச்சி திட்ட பயனாளிகள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .
வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பம்பமாகின. பின்னர் நிகழ்வின் தலைவர் ராமச்சந்திரன் தனதுரையில் மீள் எழுச்சி திட்டம் மூலம் தமது வாழ்வை வளபடுத்தி இந்த 5 வருடத்தில் 125000 ரூபாய் சேமிப்பு செய்துள்ள எக்ஸ்ஓரா என்ற சிறு குழு உறுபினர்களுக்கு பிரதி திட்ட பணிப்பாளர் அவர்கள் தாம் அவர்களை ஊக்க படுத்த கொண்டுவந்த நினைவு பரிசை வழங்க வேண்டும் என்றும் மேலும் தாம் கேட்டு தாய், தந்தையை இழந்த ,மற்றும் வறிய 40 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்க சம்மதித்த தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவரும், பொருளாதார அமைச்சின் உத்தியோகத்தருமான சந்திரகுமார் (கண்ணன் )அவர்களுக்கு நன்றியையும் தெரிவித்து கொண்டார் .
பிரதி திட்ட பணிப்பாளர் தனது பிரதம உரையில் மீள் எழுச்சி திட்டம் மூலம் வாழ்வாதாரத்தை பெருக்கி கொண்டது மட்டுமல்லாமல் அதை ஒரு நிகழ்வாகவும் செய்தமை பாராடுதலுக்குறியது என்றும் மேலும் எக்ஸ் ஓரா சிறுகுழு போன்று மாணவர்களாகிய நீங்களும் சிறு வயத்தில் இருந்தே சேமிப்பை கற்று கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார் .
சந்திரகுமார் (கண்ணன் ) தனதுரையில் மாணவர்களிடம் சேமிப்பின் கட்டாயத்தையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் கருப்பொருளாக கொண்டு உரை நிகழ்த்தினார். பின்னர் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இறுதியில் மீள் எழுச்சி திட்ட செயலாளரின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது.