வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபையால் வருடாந்த வாசிப்பு மாத நிகழ்வும் பரிசளிப்பு நிகழ்வும் நேற்று முன்தினம் (05.11) நடைபெற்றது.
இன் நிகழ்வின்போது பல்கலைக் கழக மாணவன் அ.குகநாதனுக்கு கல்விச் செலவுகளிற்காக 20 000 ரூபா பணம் வழங்கப்பட்டது. அத்துடன் 90 வயதைத் தாண்டிய முதியவரான கல்மடுவைச் சேர்ந்த திரு.மரியதாஸ் அவர்களும் கௌரவிக்கப்பட்டார்.
மேலும் வவுனியா தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட நூலகங்களில் இருந்து இரண்டு சிறந்த வாசகர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் பாடசாலை மானவர்களிடையே நடாத்தப்பட்ட கவிதை, கட்டுரை, சிறுகதை போன்றவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்பட்டன.