யாழில் குளிரூட்டப்பட்ட தயாரிப்புக்களுக்கு தீடீர் தடை காரணமாக 15 ஆயிரம் வியாபாரிகள் பாதிப்பு!!

485

ice cream

யாழில் ஐஸ்கிறீம் உள்ளிட்ட குளிரூட்டப்பட்ட உணவு தயாரிப்புக்களுக்கு திடீர்த் தடை விதிக்கப்பட்டதால், 59 நிறுவனங்களைச் சேர்ந்த 2,500க்கும் அதிகமானவர்கள் நேரடியாக தொழில்வாய்ப்பை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

15 ஆயிரத்திற்கும் அதிகமான வியாபாரிகள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட உப உணவு மற்றும் குளிரூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் மு.உதயசிறி யாழ். ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தங்களின் பிரச்சினை தொடர்பில் பூரணமாக எடுத்துக்கூறிய போதிலும், வட மாகாண சுகாதார அமைச்சு உடன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.