நெஞ்சை நெகிழவைத்த திருமணங்கள்!!

337

சென்னையில் மாற்றுத் திறனாளிகளான 58 ஜோடிகளுக்கு விமரிசையாக ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றது.

சென்னை கீதா பவன் அறக்கட்டளையும், ஊனமுற்றோர் கூட்டமைப்பும் சேர்ந்து மாற்று திறனாளிகள் திருமணத்தை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

இந்த ஆண்டும் 58 ஜோடிகளை சுயம்வரம் மூலம் தெரிவு செய்தது. அவர்களுக்கான திருமணம் கீதா பவனில் நடந்தது.

எல்லா மணமக்களும் மண்டபத்தில் ஜோடி, ஜோடியாக அமர வைக்கப்பட்டனர்.

பட்டு வேட்டி, பட்டு சட்டை, பட்டுப்புடவையுடன் மணக்கோலத்தில் அமர்ந்து இருந்த ஜோடிகளுக்கு வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடந்தது.

இதில், மாற்று திறனாளிகள் இல்லாத 7 ஆண்களும், 21 பெண்களும் மாற்று திறனாளிகளை தங்கள் துணையாக ஏற்றுக் கொண்டது அனைவரையும் நெகிழ வைத்தது.

Wed wed1 wed2 wed3