பேய் என நினைத்து அப்பாவிப் பெண்ணை எரித்து கொன்ற கொடூரம்!!

327

Pei

பெரகுவே நாட்டில் பேய் என நினைத்து பெண் ஒருவர், தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரகுவே நாட்டை சேர்ந்த அடோல்ஃபினா ஒகம்பஸ் (45) என்ற பெண்ணை பேய் என கூறிய கிராம மக்கள் அவரை நதியில் மூழ்கடித்துள்ளனர்.

இதன்பின் கம்பத்தில் கட்டி போட்டு அடித்து, அவரை உயிரிடன் தீ வைத்து எரித்து கொலை செய்துள்ளனர்.

இதுகுறித்து கிராம மக்களில் ஒருவர் கூறுகையில், பெண்ணின் தங்கை ஒரு வருடத்திற்கு மேல் உடல்நலம் குறைவாக இருந்ததாகவும், அவரும் அதற்கு ஒகம்பாஸ் தான் காரணம் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நாங்கள் செய்த இந்த காரியத்திற்காக சிறிதும் வருந்தவில்லை என கிராம மக்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக 14 வயது சிறுவன் ஒருவன் உட்பட 8 நபர்களை கைது செய்த பொலிசார், தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.