இலங்கை அகதிகள் பற்றிய குற்றச்சாட்டை ஏற்க முடியாது : அவுஸ்திரேலியா!!

373

Aus

இலங்கை புகழிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் தமது நாட்டுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக் கொள்ள முடியாது என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என்பதை விளக்கியுள்ள தென்னிந்தியாவிலுள்ள அவுஸ்திரேலியா தூதரக பிரதிநிதி சீன்கெலி இதனை கூறியுள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா கடுமையான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களில் சுமார் 1200 பேர் கடல் வழியாக சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு உண்மையானது என நிரூபிக்கப்பட்டால், அவர்களை நவுரு தீவில் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தென்னிந்தியாவுக்கான அவுஸ்திரேலிய தூதரக பிரதிநிதி கூறியுள்ளார்.

சட்டவிரோதமின்றி சரியான வழியில் அவுஸ்திரேலியாவுக்கு வரும் நபர்களை வரவேற்க அவுஸ்திரேலியா என்றும் தயாராகவே உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.