வவுனியா இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் ஒன்றுகூடல்!!(படங்கள்)

292

வவுனியா இந்துக்கல்லூரியில் 2010 ம் ஆண்டு உயர்தரம் கற்று வெளியேறிய பழைய மாணவர்களின் ஒன்று கூடல் 2014.11.09 ம் திகதி வவுனியா ரோயல் மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ் ஒன்று கூடல் நிகழ்வில் 2007 ம் ஆண்டு சாதாரண தரம்(O/L) பயின்ற மாணவர்கள், முன்னாள் பாடசாலை அதிபர் க.சிவஞானம், பழைய ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க தலைவர் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

ஆசிரியர் மாணவர் உறவை பலப்படுத்துவதற்காகவும், நினைவுகளை மீட்டிக் கொள்வதற்காகவும் இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதிய உணவுடன் நிறைவடைந்த இவ் ஒன்று கூடலில் இனிவரும் காலங்களில் வருடத்திற்கு ஒரு முறை இப்படியானதொரு ஒன்றுகூடல் நிகழ்வினை நடாத்துவதற்கும், பாடசாலைக்கு இயன்ற உதவிகளை செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

DSC_0482 DSC_0568 DSC_0614