உலகக்கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் நீக்கம்!!

486

WC

2015ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் சூப்பர் ஓவர் நடைமுறையை நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போட்டித்தொடரில் இரண்டு அணிகளும் சமமான ஓட்ட எண்ணிக்கையினைப் பெற்று போட்டியை நிறைவு செய்யுமாயின் கிண்ணத்தினை இரு அணிகளுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் அடுத்த வருடம் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிகளில் ஒருநாள் அந்ததஸ்து பெற்ற 14 அணிகள் 2 குழுக்களாக பிரிந்து போட்டியிடவுள்ளன.

இதனடிப்படையில் இறுதிப்போட்டிக்குள் பிரவேசிக்கும் இரு அணிகளும் சம ஓட்ட எண்ணிக்கையினை பெறுமாயின் வழங்கப்படும் சூப்பர் ஓவர் நடைமுறை, இந்த உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் வழங்கப்படமாட்டாது என ஐசிசி அறிவித்துள்ளது.