திருமணத்திற்கு முன்னர் ஆணாக மாறிய மணப் பெண்ணால் திக்குமுக்காடிய மாப்பிள்ளை!!

335

WED

உத்திரபிரதேசத்தில் திருமணத்திற்கு முதல் நாள் பெண், ஆணாக மாறிய ருசிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் பாலக் ராம் ( 37) என்பவர், நடன குழு தலைவர் ஹுகம் சிங்கிடம் 50 ஆயிரம் கொடுத்து தனக்கு பெண் பார்த்து தருமாறு கூறி உள்ளார். நடன குழு தலைவரும் அவருக்கு பெண் பார்த்து தருவதாக உறுதி அளித்து உள்ளார்.

சில நாட்கள் கழித்து ஹூகம் சிங், ராஜ் குமாரி ( 27) என்ற பெண்ணை பாலக் ராமுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், அப்பெண் மனநலம் சரியில்லாதவர் என்றும் அவருக்கு ஏற்கனவே 2 முறை திருமணம் நடந்துவிட்டது எனவும் கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து பாலக் ராம் திருமணத்திற்கு ஏற்பாடுகள் செய்ய தொடங்கினார், அவர்கள் திருமணம் ஒரு வாரம் கழித்து நடைபெறுவதாக இருந்தது.

இதனால், பால ராம், ராஜ் குமாரியுடன் பழகி வந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு முதல் நாள் ராஜ குமாரி பெண் அல்ல என்றும் 15 வயது ராஜ் குமார் என்ற சிறுவன் என தெரிய வந்தது.

இதுகுறித்து பாலக்ராம் கூறுகையில், இது ஆச்சரியமாக இருந்த போதிலும் சேலை அணிந்த ராஜ் குமாரை பார்க்கையில் மகிழ்ச்சியாக இருந்தது. உண்மையில் பெண் ஆடையில், ஆண் இருப்பார் என எண்ணவில்லை எனக் கூறியுள்ளார்.