வவுனியாவில் வெடி விபத்தில் இராணுவ சிப்பாய் காயம்!!

470

Blast

வவுனியாவில் இடம்பெற்ற வெடிவிபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளார் என வவுனியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா பூவரசன்குளம், பெரியவேலன்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற தவறுதலான வெடி விபத்தில் அப்பகுதியில் அமைந்துள்ள 612 ஆவது பிரிகேட் இராணுவ தளத்தில் கடமையாற்றும் 25 வயதுடைய லான்ஸ் கோப்ரல் தரங்க என்ற இராணுவ சிப்பாய் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அவரது ரி 56 ரக துப்பாக்கி வெடித்தமையினாலேயே காயமடைந்தார் என பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.