வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் ஐரோப்பிய விண்கலம்!!

318

rosetta

வால் நட்சத்திரத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட விண்கலம், அதன் இறுதிக் கட்டப் பாதையை வெற்றிகரமாக எட்டியுள்ளதாக ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

வால் நட்சத்திர ஆராய்ச்சிக்காக கடந்த 2004ம் ஆண்டு, பிலே எனப்படும் ரோபோவுடன் “ரொசெட்டா’ என்ற விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

160 கோடி டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், இதுவரை 600 கோடி கிலோ மீட்டர்கள் தூரம் பயணித்து தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

விண்கலத்திலிருந்து பிரிந்து வால் நட்சத்திரத்தில் “பிலே’ ரோபோ தரையிறங்குவதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கான சமிக்ஞைகள் விண்கலத்திலிருந்து ஆய்வு மையத்துக்குக் கிடைத்துள்ளன.

இந்த செயல்பாடுகள் சரிவர நடக்கும் பட்சத்தில், விண்கலத்திலிருந்து பிரிந்து “பிலே’ ரோபோ, வால் நட்சத்திரத்தில் தரையிறங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்று ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த வால்நட்சத்திரத்தில் படிந்துள்ள பனிகட்டிகள் மற்றும் நுண்துகள்கள் பற்றி பிலே ஆராய்ந்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.

பிந்திய தகவலின் படி குறித்த ரோபோ வால் நட்சத்திரத்தின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது