கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருவர் வவுனியா நகரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேகநபர்கள் கைதாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான 11 பவுண் தங்க நகைகளை அடகு வைக்க சென்றபோதே, இருவரும் சிக்கியுள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் – கோப்பாய் மற்றும் நாவற்குழி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.