கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் இந்திய வீரர் ரோகித் ஷர்மா 264 ஓட்டங்கள் அடித்து உலக சாதனை படைத்தார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த சாதனை படைத்த ரோகித் ஷர்மாவுக்கு மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் 2.64 லட்சம் ரூபா பரிசுத்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த மைதானத்தின் 150வது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த பரிசை வழங்குவது பெருமை அளிப்பதாக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் ஈடன் கார்டன் மைதானத்தில் ரோகித் இந்த சாதனையை நிகழ்த்தியது சிறப்பு அடையாளம் என்றும் கூறியுள்ளது.