தர வரிசையில் முதலிடம் பிடித்த இந்திய அணி!!

414

Ind

சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒவ்வொரு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்கள் முடிவிலும் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை அறிவித்து வருகிறது.

இந்நிலையில், இலங்கை – இந்தியா அணிகள் இடையிலான ஒருநாள் போட்டி தொடர் முடிவில் வெளியிடப்பட்டு இருக்கும் உலக ஒருநாள் போட்டி தர வரிசைப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

இத்தொடருக்கு முன்பு 113 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி தொடரை 5–0 என்ற கணக்கில் கிண்ணத்தை கைப்பற்றியதின் மூலம், 117 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது.



தென்னாபிரிக்க அணி 115 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தையும், அவுஸ்திரேலிய அணி 114 புள்ளிகளுடன் 3ஆவது இடத்தையும், இலங்கை அணி 108 புள்ளிகளுடன் 4ஆவது இடத்தையும், இங்கிலாந்து 5ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேபோல் டெஸ்ட் தரவரிசையில், தென்னாபிரிக்க அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அவுஸ்திரேலியா 117 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளது. இந்திய அணி 96 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.