சின்னக் கலைவாணர் விவேக்கிற்கு இன்று பிறந்த நாள்!!

571

Vivek

தமிழ் திரையுலகில் தனது நகைச்சுவை நடிப்பாலும், சிந்தனையை தூண்டக்கூடிய வசனங்களாலும் மக்களை வெகுவாக கவர்ந்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவரை போலவே நடிகர் விவேக்கும் நகைச்சுவையாக நடிப்பால், சமுதாயத்தில் நிலவும் அவலங்களையும், அரசு ஊழியர்கள் கடமை தவறுவதையும் சுட்டிக்காட்டி வருகிறார்.

சாமி படத்தில் லஞ்சம் வாங்குது தவறு என்பதையும், போகியன்று பழைய துணிகளை தீ வைத்து எரிப்பதற்கு பதிலாக வறுமையில் வாடுபவர்களுக்கு அதை தரலாம் என்றும், ஏழை குழந்தைகளுக்கு பள்ளிகளில் இடம் அளிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் அவர் நகைச்சுவையுடன் கூறியது பலரையும் கவர்ந்தது.

அதே போல் 12 பி படத்தில் பேருந்து நிறுத்தத்தில் டிரைவர் நிறுத்துவதில்லை என்பதையும், காதல் சடுகுடு படத்தில் கள்ளிப்பால் ஊற்றி பெண் குழந்தைகளை கொல்வது தவறு என்றும், பெண்ணை கற்பழித்தவருக்கு கட்டப்பஞ்சாயத்து மூலம் அபராதம் மட்டும் விதிப்பது தவறு என்பதையும் நகைச்சுவையாக எடுத்துக்கூறியது அநேகம் பேரை கவர்ந்தது. இப்படி பல படங்களில் தனது நகைச்சுவை நடிப்பு மற்றும் பேச்சால் அவர் மக்களை சிந்திக்கவைத்து வருகிறார்.



சமீபத்தில் வெளிவந்த நான் தான் பாலாவில், உப்பிட்டவரை உயிர் உள்ளவரை நினை என்ற கருத்தை உரக்க சொன்ன விவேக்கை இந்த பிறந்த நாளில் வவுனியா நெற் வாழ்த்துகிறது. இனி வரும் காலங்களிலும் தனது நகைச்சுவை நடிப்பால் அவர் மக்களை தொடர்ந்து சிந்திக்க வைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் தமிழ் சினிமா ரசிகர்களும் விவேக்கை வாழ்த்துகின்றனர்.