நடிகை ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட உள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா படங்களில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். இப்படங்களுக்கு பின் பட வாய்ப்புகள் குவிந்தன. சம்பளமும் கூடியது.
தற்போது சிவகார்த்திகேயனுடன் காக்கிசட்டை, ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைக்கார துரை படங்களில் நடிக்கிறார். அதர்வாவுடன் ஈட்டி படத்திலும் நடிக்கிறார். இப்படங்களுக்கு முன்பு நகர்ப்புறம், காட்டு மல்லி என இரு படங்களில் நடிக்க ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் அப்படங்கள் நின்று போயின.
அவ்விரு படங்களின் படப்பிடிப்பையும் தொடர்ந்து நடத்த அதன் தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால் ஸ்ரீதிவ்யா கால்சீட் கொடுக்க மறுக்கிறாராம். இதனால் இரண்டு தயாரிப்பாளர்களும் ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கிறார்கள்.