இந்தியில் நுழையும் அஜித்தின் ஆரம்பம்!!

616

Ajith

கடந்த வருடம் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ஆரம்பம். இதில் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி, ராணா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். விஷ்ணுவர்தன் இயக்கிய இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.

இப்படம் ரிலீசாகி அதிக வசூல் குவித்தது. இதனால் இந்திப் பட தயாரிப்பாளர்கள் பலர் இப்படத்தை ரீமேக் செய்ய ஆர்வம் காட்டினர். ஆனால் தற்போது இப்படத்தை இந்தியில் டப் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

தமிழில் ஆரம்பம் என்று வெளிவந்த இப்படம் இந்தியில் பிளேயர் கில்லாடி என்னும் பெயரில் வெளியாகிறது.

இப்படத்தின் டப்பிங் உரிமையை சினி கார்ன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் பெற்றுள்ளது. தற்போது டப்பிங் பணி நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் படத்தை வெளியிடவுள்ளனர்.