மட்டக்களப்பில் கரையொதுங்கிய விசித்திர மீன்!!

549

fish

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் பாரியளவிலான விசித்திர மீன் ஒன்று நேற்றையதினம் கரையொதுங்கியுள்ளது.

இவ்வாறாக இறந்த நிலையில் கரையொதுங்கிய மீனினமானது சுமார் நான்கு அடி நீளமுடையதாக காணப்பட்டது.

அண்மைக்காலமாக கடல் வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்ற நிலையில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



இவ்வாறு கரையொதுங்கிய மீனினை அதிகளவிலான பொதுமக்கள் வருகைதந்து பார்வையிடுவருகின்றனர்.