மதுரை மாவட்டத்தில் 65 வயது பாட்டியை கிண்டல் செய்த 85 வயது முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் கீழத்தெருவைச் சேர்ந்தவர் குருசாமி (85). இதே பகுதியைச் சேர்ந்தவர் தண்டீஸ்வரன் (65). இவரது மனைவி ருக்குமணி (62).
கடந்த 11ம் திகதி ருக்குமணியை குருசாமி கேலி, கிண்டல் செய்துள்ளார். இது குறித்து ருக்குமணி தனது கணவரிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தண்டீஸ்வரன் மனைவியுடன் சேர்ந்து குருசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த குருசாமி சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு குருசாமி இறந்தார்.
இது குறித்து திருமங்கலம் பொலிசார் வழக்குப் பதிவு செய்து தண்டீஸ்வரன், அவரது மனைவி ருக்குமணியை கைது செய்தனர்.