வவுனியாவில் உள்ள அரச வங்கி ஒன்றில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வைப்பிலிடச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார், விடத்தல்தீவுப் பகுதியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரே வவுனியா பொலிஸாரால் நேற்று செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வவுனியா நகரில் உள்ள அரச வங்கி ஒன்றில் பணத்தை வைப்பிலிடச் சென்றபோது பணத்தில் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள் இருந்தமை வங்கி உத்தியோகத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வங்கி நிர்வாகம் இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தெரியப்படுத்தியது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர்.
சந்தேக நபரை இன்று நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.






