ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!!

2539

mansarivu

இலங்கையில் பல பாகங்களில் தொடர்ந்து நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களில் மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலேயே மண் சரிவு அபாயம் நிலவுவதாக தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண் சரிவுகள் ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி பஹிரவகந்த பகுதியில் மண் சரிவு ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக சுமார் 35 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தமது குடியிருப்புகளில் இருந்து வெளியேறி நேற்றிரவு முழுவதும் கண்டி பேராதனிய வீதியில் தஞ்சமடைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.



பஹிரவகந்த பகுதியில் மண் மேடொன்று சரிந்து வீதியில் விழுந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய தமது அதிகாரிகள் இன்று குறித்த பகுதிக்கு சென்று மண் சரிவு அபாயம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை வடக்கில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக பல மக்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.