பிலிப் ஹியூஸ் இறுதிப்பயணம்!!

366

phillip-hughes

பவுன்சர் பந்துவீச்சில் தலையில் படுகாயமடைந்த அவுஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்ஸ், சிகிச்சை பலனின்றி சில தினங்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்கு இன்று நடைபெற்ற வருகிறது. அதனையொட்டி நடைபெறும் வழியனுப்பு நிகழ்வில் பலரும் பேசிவருகின்றனர்.

நியூ சவுத் வேல்ஸ் அருகில் உள்ள அவரது சொந்த ஊரான மேக்ஸ்வில்லி உயர்நிலை பள்ளியில் நடைபெற்று வரும் இந்த வழியனுப்பு நிகழ்வில் இந்திய அணி சார்பில் கேப்டன் கோலி, மேலாளர் ரவி சாஸ்திரி பயிற்சியாளர் டங்கன் ப்ளெட்சர் ஆகியோர் உள்பட 5000 பேர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி தலைவர் கிளார்க் உள்பட அனைத்து வீரர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிகழ்வில் பேசிய ஹியூக்சின் சகோதரர் ஜேசன் ஹியூக்ஸ், அவரை விட நல்ல தம்பியை நான் கேட்கமுடியாது, அவருக்கு நான் இறுதி மரியாதை செலுத்துவதை என்னால் நம்பமுடியவில்லை, இந்த நேரத்தில் எங்கள் குழந்தைப்பருவ நிகழ்வுகளை நினைத்துப்பார்க்கிறேன்.



நாங்கள் இருவரும் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நானும் பிலிப்பும் சேர்ந்து மோஸ்மேன் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 210 ஓட்டங்கள் எடுத்தோம். வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு, நாள் முழுவதும், தொடர்ந்து மறுநாள் முழுவதும் துடுப்பாட்டம் செய்வதை பிலிப் பெரிதும் விரும்புவார் என ஜேசன் பெருமையுடன் குறிப்பிட்டார்.