வவுனியாவில் வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழான உதவி!!

608

வடமாகாண சபை உறுப்பினர் இ.இந்திரராசா தனது பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியல் முன்பள்ளி அபிவிருத்திக்கு 360000 ரூபா ஒதுக்கீடு செய்துள்ளார்.

இந் நிதியில் இருந்து சாந்தசோலை முன்பள்ளி, கூமாங்குளம் அம்பாள் முன்பள்ளி, இராமனூர் முன்பள்ளி வளநிலையம், பொன்னாவரசங்குளம் முன்பள்ளி, மாங்குளம் முன்பள்ளி, ஆண்டியாபுளியங்குளம் முன்பள்ளி, ஆனைவிழுந்தான் மதரசா என்பவற்றிற்கு ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள், நூலகப் புத்தகங்கள், பிளாஸ்டிக் கதிரைகள்கள் என்பன அண்மையில் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் அவரது பிரத்தியேக செயலாளரால் 21.11.2014 அன்று கையளிக்கப்பட்டுள்ளன.

இச்செயற்திட்டங்களை நிறைவுசெய்ய பூரண ஒத்துழைப்பை வழங்கிய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் வடமாகாண சபை உறுப்பினர் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

SAM_3207 SAM_3210 SAM_3213 SAM_3226