அடுத்த ஆண்டு நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் நடக்கவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக க்கிண்ண கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2015) நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் பெப்ரவரி 14ம் திகதி முதல் மார்ச் 29ம் திகதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணியை தெரிவு செய்வதற்கான தெரிவுக் குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது.
சந்தீப் பட்டீல் தலைமையிலான இந்த கூட்டத்தில் தெரிவாளர்கள் 5 பேரும் ஆலோசித்து அணியை தெரிவு செய்தனர். இதில் கடந்த (2011) உலகக்கிண்ணப் போட்டியில் தொடர்நாயகன் விருது பெற்ற யுவராஜ்சிங், அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக், கவுதம் கம்பீர், யூசுப் பதான் ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர்.
அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா, இர்பான் பதான் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் ஆகியோருக்கும் உத்தேச அணியில் இடம் கிடைக்கவில்லை.
30 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் விவரம்:-
டோனி, தவான், ரோஹித் சர்மா, அஜின்கியா ரஹானே, ராபின் உத்தப்பா, விராட் கோஹ்லி, சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, கேதர் ஜோதவ், மனோஜ் திவாரி, மனிஷ் பாண்டே, ரிதிமான் சகா, சாஞ்சு சாம்சன், ஆர்.அஸ்வின், பர்வீஸ் ரசூல், கரண் சர்மா, அமித் மிஸ்ரா, ரவிந்தர் ஜடேஜா, அக்சர் படேல், இஷாந் சர்மா, புவனேஷ்வர் குமார், முகம்மது சமி, உமேஷ் யாதவ், வருண் ஆரோன், தவால் குல்கர்னி, ஸ்டுவார்ட் பின்னி, மோகித் சர்மா, அசோக் திண்டா, குல்தீப் யாதவ், மற்றும் முரளி விஜய்.






