வவுனியாவைச் சேர்ந்த விஜேந்திரன் அவர்களால் நோர்வேயில் “பசுமை தேடும் பறவைகள்” எனும் இசைத் தொகுப்பு வெளியிடப்படவுள்ளது.
ஒட்டுசுட்டான் செந்தணல் வெளியீட்டகம் வெளியிடும் இவ் இசைத் தொகுப்பிற்கான கவிதை வரிகளை கவிஞர் நோர்வே விஜேந்திரன் எழுத, இன்னிசை இளவல் பி.எஸ்.விமல்ராஜ் இசையமைத்துள்ளார். ஒலிப்பதிவை பிரபல ஒலிப்பதிவாளர் சி.எம்.கலிஸ்ரஸ் அவர்களும் கவிதைக்கான குரல் வடிவத்தை “காவிய பிரதீபா” கவிஞர் வன்னியூர் செந்தூரனும் சிறப்பாக செய்துள்ளனர்.