இங்கிலாந்து அணித் தலைவருக்கு போட்டித்தடை!!

430

Cook

ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் இரவு நடந்த இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மழையால் 35 ஓவராக குறைக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் டக்வத்-லுவிஸ் விதிப்படி இலங்கை அணி நிர்ணயித்த 236 ஓட்டங்கள் இலக்கை இங்கிலாந்து 33.4 ஓவர்களில் எட்டியது.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இரு ஓவர் தாமதமாக பந்து வீசியது கண்டுபிடிக்கப்பட்டதால், இங்கிலாந்து தலைவர் அலஸ்டயர் குக்குக்கு போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

ஓராண்டுக்குள் 2வது முறையாக மெதுவான பந்து வீச்சு புகாரில் சிக்கியதால் ஒரு போட்டியில் விளையாட தடையும் அவருக்கு விதிக்கப்பட்டது. இதனால் 7ம் திகதி நடக்கும் 4வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை இயன் மோர்கன் வழிநடத்த உள்ளார்.