அமெரிக்காவில் 9 வயது மகளின் பிணத்தை அவரது தாயார் பதுக்கி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஆம்பர் கெய்ஸ்(35) என்ற பெண் அவரது அய்ஹன்ன கோம்ப் என்ற 9 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
தனது மகள் மனவளர்ச்சி குன்றியவளாக இருந்ததால் ஆம்பர் தனது மகளை சித்ரவதை செய்து வேண்டா- வெறுப்பாக வளர்த்து வந்துள்ளார். மேலும் கடந்த ஜனவரி மாதம் முதல் மகளை காணவில்லை என ஆம்பர் நாடகமாடிள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆம்பரின் மற்றொரு மகளும் அவளது தோழிகளும் வீட்டில் ஏதாவது சாப்பிட இருக்கிறதா என குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளனர். அப்போது அங்கு அய்ஹன்ன பிணம் இருப்பதை கண்டு பயந்து போன அவர்கள் விட்டை விட்டு ஓடி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து ஆம்பர் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் கடந்த ஜனவரி 29ம் திகதி எனது மகள் எழுந்திருக்கவில்லை. நான் பலமுறை எழுப்பிப் பார்த்தும் அவள் எழுந்திருக்கவில்லை என்றும், அதனால் ஒரு துணியில் சுற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டேன் எனவும் கூறியுள்ளார்.