பேஸ்புக்கில் ஆபாசப் படத்தைப் போட்டு பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்திய இருவர் கைது!!

498

FB

பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவேற்றி, பெண்கள் இருவருக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றசாட்டில் குடும்பஸ்தர் ஒருவரும் இளைஞர் ஒருவரும் யாழ். நெல்லியடி பொலிசாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி கரவெட்டி பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரை வரணியை சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவர் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார்.

அதற்கு அப் பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். அதையடுத்து குறித்த இளைஞன் அப்பெண்ணின் பேஸ்புக் பக்கத்தில் ஆபாச படங்களை பகிர்ந்துள்ளார்.



பேஸ்புக்கில் ஆபாசப் படம் பகிரப்பட்டது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முறைப்பாடு பதிவு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இளைஞன் நெல்லியடி பொலிசாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

இதேவேளை மனைவியின் தங்கையின் புகைப்படத்தை ஆபாச படங்களுடன் இணைத்து பேஸ்புக்கில் பதிவேற்றினார் எனும் குற்றசாட்டில் வடமாரட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த 31 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் சனிக்கிழமை நெல்லியடி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணினால் சனிக்கிழமை நெல்லியடி பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரமே குறித்த நபர் கைதாகியுள்ளார்.

சந்தேகநபர் தனது திருமணத்தை குழப்பும் நடவடிக்கைகளில் பல காலமாக ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இருவரிடமும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர்களை திங்கள்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் நெல்லியடி பொலிசார் சுட்டிக்காட்டியுள்ளனர்.