உலகக்கிண்ண கிரிக்கெட் (2015) போட்டிக்கான 30 பேர் கொண்ட இலங்கை உத்தேச அணி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
பந்து வீச தடை செய்யப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் சசீதிர சேனநாயக்க ஐ.சி.சி.யின் அனுமதிக்காக காத்திருக்கிறார். இவர் அணியில் இடம்பெற்றுள்ளார்.
அதே போல டில்ஹார பெனான்டோ, சாமர கப்புகெதர ஆகியோரும் காத்திருக்கின்றனர்.
புதிதாக அணியில் இடம்பெற்றுள்ள பந்துவீச்சாளர் லக்ஸ்ஹன் சந்தகன் இந்த உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிராக 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டியில் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
30 பேர் கொண்ட உத்தேச இலங்கை அணியின் விவரம் வருமாறு..
ஏஞ்சலோ மத்யூஸ் (அணித்தலைவர்), டில்ஷான், லஹிரு திரிமான, குமார் சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன, குசால் பெரேரா, உபுல் தரங்க, திமுத்து கருணாரத்ன, தினேஷ் சண்டிமால், அஷான் பிரியன்ஞன் , கித்துருவான் விதானகே, நிரோஷன் டிக்வெல்ல, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா, சீக்குகே பிரசன்ன, சசீதிர சேனநாயக்க, அஜந்த மெண்டீஸ்,தரிந்து காஸ்ஹல், ஜீவன் மெண்டீஸ், ரமித் ரம்புக்வெல, சுரங்க லக்மால், நுவன் குலசேகர, லசித் மலிங்க, தம்மிக்க பிரசாத், சமிந்த எரங்க, திசரா பெரேரா, பர்ரூஸ் மகரூப், நுவான் பிரதீப், லஹிரு கமகே, லக்ஸ்ஹன் சந்தகன்.