என்னை திட்டமிட்டு களங்கப்படுத்தி விட்டனர் என்று விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதா பாசு கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு, இவர் சமீபத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கைதானார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், நடைபெற்ற விசாரணைக்கு பிறகு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டார்.
தற்போது காப்பக்கத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டு உள்ளார், இந்நிலையில் விபச்சார வழக்கில் சிக்கியது குறித்து ஸ்வேதா பாசு மும்பையில் அளித்த பேட்டியொன்றில் கூறுகையில், சிலர் திட்டமிட்டு என்னை சிக்க வைத்து விட்டனர். எனது பெயரையும் களங்கப்படுத்தி விட்டார்கள்.
ஐதராபாத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்தேன். அப்போது இவையெல்லாம் நடந்து விட்டது. ஆனாலும் இறுதியில் உண்மையானதில் எனக்கு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.