பார்வையற்றோர் உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சம்பியன்!!

398

IND

பார்வையற்றோருக்கான 4வது உலகக்கிண்ண போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கிண்ணம் வென்றது. தென் ஆபிரிக்காவில் பார்வையற்றோருக்கான 4வது உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்று வந்தது.

நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 40 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 389 ஓட்டங்கள் குவித்தது.

பின் கடின இலக்கை விரட்டிய இந்திய அணி 39.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 392 ஓட்டங்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கிண்ணத்தை கைப்பற்றியது.



வெற்றி குறித்து இந்திய அணித்தலைவர் சேகர் நாயக் கூறுகையில், உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.,) திகழ்கிறது. ஆனாலும், பார்வையற்ற வீரர்களுக்கு எவ்வித உதவியும் அளிப்பதில்லை.

இந்திய விளையாட்டு அமைச்சகம் தான் 25 லட்சம் அளித்தது. இதன் காரணமாகவே தென் ஆபிரிக்காவுக்கு வந்து போட்டிகளில் கலந்து கொண்டு, கிண்ணம் வெல்ல முடிந்தது என்று கூறியுள்ளார்.