ரம்புக்கனையில் வைத்து பெற்ற மகளை இரண்டு தடவைகள் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கினார் என்ற சந்தேகத்தில், ஒருவரை வவுனியாவில் கைது செய்துள்ளதாக குற்றத் தடுப்பு விசாரணை பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாவக்குளத்தில் கடையொன்றை உடைத்து திருடிய சம்பவம் தொடர்பில் வவுனியா, மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் யு.கே.திசாநாயக்க மற்றும் வவுனியா சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் வசந்த விக்கிரம ஆகியோரின் வழிநடத்தலில் விசாரணைகளை மேற்கொண்ட போது ரம்புக்கனையை சேர்ந்த 36 வயதுடைய நபரொருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
அவரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில் மேற்படி சந்தேக நபர், தான் பெற்ற மகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய நிலையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.