சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி சரியானதே : ஐசிசி அறிவிப்பு!!

368

sachithra senanayake

இலங்கை அணியின் சுழல்பந்து வீச்சாளர் சச்சித்திர சேனாநாயக்கவின் பந்துவீச்சு பாணி ஐசிசி விதிமுறைக்கு ஏற்றது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இலங்கை அணியின் சச்சித்திர சேனாநாயக்க மற்றும் நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோரின் பந்துவீச்சு முறை சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விதிமுறைகளுக்கு புறம்பானதென குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் இருவரும் பரிகார வேலை மற்றும் மீள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அந்த சோதனையின் முடிவை சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று வெளியிட்டுள்ள நிலையில், சச்சித்திர சேனாநாயக்க மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச முடியும் என அனுமதி அளித்துள்ளது.