வவுனியா, தாலிக்குளம் பகுதியில் காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட கத்தி வெட்டு சம்பத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா, தாலிக்குளம் பகுதியில் நேற்று திங்கள் கிழமை இரவு காதல் விவகாரம் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.
காதல் பிரச்சனை தொடர்பில் தனது வீட்டுக்கு அயல் வீட்டுக்காரர் தெரிவித்ததையடுத்து, அயல்வீட்டுக்கு சென்ற இளைஞன் தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து வாக்குவாதம் கத்திவெட்டாக மாறியதில் குறித்த இளைஞன் மரணமடைந்துள்ளதுடன் அயல் வீட்டுப் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளார்.
இச் சம்பவத்தில் தியாகராசா பாஸ்கரன் (18) என்ற இளைஞன் பலியாகியதுடன், தேவராஜா கோவிந்தம்மா (65) காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.