ரசிகர்களை கவர்ந்த அருண் விஜய்யின் சிக்ஸ் பேக்!!

389

Arun Vijay

பாண்டவர் பூமி, இயற்கை, மாஞ்சாவேலு, தடையற தாக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அருண் விஜய். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் என்னை அறிந்தால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் அருண் விஜய்யின் கெட்டப் ரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்தில் அவரது கதாபாத்திரம் சிக்ஸ் பேக் உடலமைப்பாக மாற்றியுள்ளது. இதற்காக 6 மாத காலமாக ஒரு நாளைக்கு சுமார் 6 முதல் 7 மணி நேரம் வரை ஜிம்மில் உடற்பயிற்சி செய்திருக்கிறார்.

இந்த படம் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாகவும், திருப்புமுனை ஏற்படுத்தக்கூடிய படமாகவும் இருக்கும் என்றும் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்றும் அருண் விஜய் நம்புகிறார்.