கடந்த கால கொடூர யுத்தம் வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை முடக்குவதில் முக்கிய பங்கெடுத்தமை கடந்த கால வரலாறாகும்.
யுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களாலும் செல் தாக்குதல்களாலும் காலை இழந்த மகனுடனும் நெஞ்சிலே செல் துண்டுகளைச் சுமந்து துன்பமுறும் மகளுடனும் வாழ்ந்து வரும் கட்டையர்குளம், சாஸ்த்ரி கூழாங்குளத்தைச் சேர்ந்த திரு.இ.காந்திநாதன் குடும்பத்தின் சுய தொழில் விருத்திக்காக வட மாகாணசபை உறுப்பினர் கௌரவ இ.இந்திரராசா அவர்கள் ஒரு தொகைப் பணத்தை வழங்கியுள்ளார்.
இந் நிதியின் மூலம் 40000 ரூபா பெறுமதியான நல்லின கறவைப் பசு மாடு கொள்வனவு செய்து வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வறுமைக் கோட்டின்கீழ் இருக்கும் இக்குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியாக இந்நிதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.