கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு கரையோரப்பகுதியை தாக்கிய சக்திவாய்ந்த புயலால் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் செவ்வாய் கிழமையன்று காலை, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்கு கரையோரப்பகுதியை சக்திவாய்ந்த மித வெப்பமண்டல புயல் தாக்கி்யுள்ளது.
இதனால் ஏற்பட்ட பலத்த காற்றினால் படகுச் சேவைகள் ரத்துச்செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரத்தை இழந்துள்ளனர். பலத்த மழையினால் வீதிகள் மற்றும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது.
பிற்பகல் அளவில் புயலின் வேகம் சற்று தளரந்திருந்த போதும் பல இடங்களில் செவ்வாய்கிழமை மீண்டும் திரும்பி புதன்கிழமை காலை வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்கூவர் ஐலன்ட் கிழக்கு கரை, கோட்டெனி நகர் பகுதிகளில் ஒரு அவசர கால நிலை பிரகடனப்படுத்தப்பட்டு நகரின் பல வீதிகள் மூடப்பட்டது.
மேலும், ஆறுகளும் சிற்றோடைகளும் தொடர்ந்தும் உயரும் என எதிர்பார்க்கப்படுவதால் வன்கூவர் பணிக்குழவினர் வெள்ளப்பெருக்கை தடுக்க மணல் மூட்டைகளை அடுக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.