நான் ஏழையாக பிறந்ததால் ஏழைப்பெண்ணை மருமகளாக்கினேன் : வடிவேலு!!

419

vadivelu

ஏழை வீட்டு பெண்ணை மருமகளாக எடுத்ததில் பெருமைப்படுகிறேன் என்று நடிகர் வடிவேல் கூறியுள்ளார். நடிகர் வடிவேலுவின் மகன் சுப்பிரமணியனுக்கும், திருப்புவனத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி புவனேஸ்வரிக்கும், மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் திருமணம் நடந்தது.

இந்த திருமணம் ரகசிய திருமணமா என்ற கேள்விக்கு பதிலளித்த வடிவேலு, சுப்பிரமணியன் எனக்கு மூத்த மகன். தலைமகன் என்பதால் தை மாதம் திருமணம் நடத்தக்கூடாது என்று சொன்னார்கள். மாசி மாதம் அவனுடைய பிறந்த மாதம் என்பதால், மாசியிலும் திருமணம் நடத்தமுடியாது. அதனால்தான் இந்த மாதத்தில் திருமணத்தை நடத்தினோம். இதில் ரகசியம் எதுவும் இல்லை.

குறுகிய காலத்தில் என் மகன் திருமணத்தை நடத்தியதால், சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் யாரையும் அழைக்கமுடியவில்லை.



மருமகள் புவனேஸ்வரி, என் மனைவி விசாலாட்சி வழியில் உறவுப்பெண். ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய அப்பா ஒரு பந்தல் தொழிலாளி.

நான் ஏழையாக பிறந்ததால், ஏழை வீட்டில் சம்பந்தம் செய்திருக்கிறேன், அன்னை மீனாட்சி அம்மன் அருளில், நான் பிறந்த மண்ணில்தான், என் மகள், மகன் இருவருக்கும் சம்பந்தம் செய்திருக்கிறேன்.

என் மருமகள் புவனேஸ்வரி திருமண வயதை அடையவில்லை என்று யாரோ செய்த புகாரின்பேரில், பொலிசார் மண்டபத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

புவனேஸ்வரிக்கு 19 வயது நிறைவடைந்து, 7 மாதங்கள் ஆகிறது, இதை ஆதாரத்துடன் நிரூபித்ததும் பொலிசார் வருத்தம் தெரிவித்தார்கள் என்று கூறியுள்ளார்.